குமரியில் இன்று 99 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


குமரியில் இன்று 99 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 29 Aug 2021 6:21 PM GMT (Updated: 29 Aug 2021 6:21 PM GMT)

குமரி மாவட்டத்தில் இன்று 99 இடங்களில், நேரடி டோக்கன் முறையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்று 99 இடங்களில், நேரடி டோக்கன் முறையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) 99 இடங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், ஆறுதேசம், இடைக்கோடு, குட்டக்குழி, கோதநல்லூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து வயதினருக்கும் மற்றும் இருதய நோய், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும். 
குழித்துறை அரசு ஆஸ்பத்திரி, கோட்டார் கவிமணி பள்ளி ஆகியவற்றில் வெளிநாடு செல்வோருக்கான கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும். கணபதிபுரம், சிங்களேயர்புரி, தோவாளை, ஆரல்வாய்மொழி, அருமநல்லூர், அழகப்பபுரம், கொட்டாரம், மருங்கூர், முட்டம், குருந்தன்கோடு, நடுவூர்கரை, வெள்ளிச்சந்தை, குளச்சல், திருவிதாங்கோடு, பள்ளியாடி, ஓலவிளை, பத்மநாபபுரம், கீழ்குளம், நட்டாலம், உண்ணாமலைக்கடை, குழித்துறை, மேல்புறம், பத்துக்காணி, பளுகல், களியக்காவிளை, இடைகோடு, முன்சிறை, தூத்தூர், கொல்லங்கோடு, தேங்காப்பட்டணம் மற்றும் நாகர்கோவிலில் கிருஷ்ணன்கோவில், வடசேரி, வட்டவிளை, வடிவீஸ்வரம், தொல்லவிளை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இருதய நோய், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
கருங்கல்-குலசேகரம்
ஆசாரிபள்ளம், பூதப்பாண்டி, கன்னியாகுமரி, சேனம்விளை, கருங்கல், குளச்சல், அருமனை, குலசேகரம், பத்மநாபபுரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளிலும், பெருமாள்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி, வீரநாராயணமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி, தடிக்காரன்கோணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அஞ்சுகிராமம் மினிகிளினிக், தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, லீபுரம் பஞ்சாயத்து அலுவலகம், பஞ்சலிங்கபுரம் பஞ்சாயத்து அலுவலகம், தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மங்கவிளை சரஸ்வதி வித்யாலயா பள்ளி, பேயோடு கம்யூனிட்டி அரங்கம், காரவிளை கம்யூனிட்டி அரங்கம், தேவிகோடு கம்யூனிட்டி அரங்கம், இலவுவிளை புனித அலோசியஸ் பள்ளி, மார்த்தாண்டம் ஒயிட் மெமோரியல் பள்ளி, மணவிளை அரசு தொடக்கப்பள்ளி, மணவாளக்குறிச்சி மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி, மண்குழி புனித சேவியர் தொடக்கப்பள்ளி, முகிலன்விளை அரசு தொடக்கப்பள்ளி, சேக்கல் புனித பீட்டர் தொடக்கப்பள்ளி, அண்டூர் அரசு நடுநிலைப்பள்ளி, குலசேகரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மலைக்கோடு அரசு தொடக்கப்பள்ளி, படந்தாலுமூடு டி.சி.கே. மேல்நிலைப்பள்ளி, பாகோடு அரசு உயர்நிலைப்பள்ளி, பாத்திரமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, கண்டன்விளை அரசு தொடக்கப்பள்ளி, முளகுமூடு புனித ஜோசப் ஆண்கள் பள்ளி, அடைக்காகுழி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் நாகர்கோவிலில் செட்டிகுளம் அரசு தொடக்கப்பள்ளி, வல்லன்குமாரன்விளை அரசு தொடக்கப்பள்ளி, வடக்கு சூரங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, சைமன்நகர் குழந்தைகள் பூங்கா, ஜோதி நகர் ஐ.சி.டி.எஸ். அருகுவிளை, பள்ளிவிளை ஐ.சி.டி.எஸ்., பரமாத்மலிங்கபுரம் ஐ.சி.டி.எஸ்., யாதவர் தெரு ஐ.சி.டி.எஸ்., புதுகுடியிருப்பு ஐ.சி.டி.எஸ்., சபையார்குளம் ஐ.சி.டி.எஸ்., ஆசாரிபள்ளம் ஐ.சி.டி.எஸ். ஆகியவற்றில் அனைத்து வயதினருக்கும் மற்றும் இருதய நோய், சர்க்கரை நோயாளிகள்,  கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
கோவேக்சின் தடுப்பூசி
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி, வடசேரி அரசு உயா்நிலைப்பள்ளி மற்றும் கிள்ளியூர், கீழ்குளம், நட்டாலம், உண்ணாமலைக்கடை, குழித்துறை, முட்டம், இடைகோடு ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.  இன்று நடைபெறும் முகாம்களில் ஆன்லைன் டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் நேரடி டோக்கன் முறையில் தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story