கரூரில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை மும்முரம்
கரூரில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
கரூர்,
கிருஷ்ண ஜெயந்தி
ஆவணி மாதம் தேய்பிறையின் 8-ம் நாள் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ண ஜெயந்தி இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவை பலர், வீடுகளில் கிருஷ்ணர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். மேலும் அவர் விரும்பி உண்ணும் இனிப்பு சீடை, அதிரசம், வெண்ணெய் உள்ளிட்டவற்றை வைத்து வழிபடுவது வழக்கம்.
கிருஷ்ண ஜெயந்தி இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கரூர் நகரின் பல்வேறு பகுதிகளான கோவை ரோடு, ஜவஹர்பஜார், வெங்கமேடு, பசுபதிபாளையம் உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணரின் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
ரூ.100-க்கு விற்பனை
களிமண்ணை அச்சில் பதித்து புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர், வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணர் உள்ளிட்ட பல்வேறு அழகிய வடிவங்களில் கிருஷ்ணர் சிலைகளை வடிவமைத்து வர்ணம் பூசி விற்பனைக்கு வைத்திருந்தனர். ரூ.100 முதல் ரூ.400 வரை பல்வேறு வடிவங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை தங்களுக்கு பிடித்தமானவற்றை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story