நெல்லையில் தொடர் ஜோதி ஓட்டம்


நெல்லையில் தொடர் ஜோதி ஓட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2021 12:27 AM IST (Updated: 30 Aug 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

பாரதியார் நினைவு நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி நெல்லையில் தொடர் ஜோதி ஓட்டம் நடந்தது.

நெல்லை:
பாரதியார் நினைவு நூற்றாண்டு தினத்தையொட்டி பாரதியார் படித்த பள்ளியான நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வெளிநாடு வாழ் தமிழர்கள் பங்கேற்கும் பாரதி குறித்த இணையவழி கருத்தரங்கம் நடக்கிறது.
இந்த நிலையில் பாரதியார் படித்த பள்ளி மாணவர்களின் தொடர் ஜோதி ஓட்டம் நேற்று சீவலப்பேரியில் இருந்து தொடங்கி நெல்லை சந்திப்பு வரை வந்தது. இந்த ஜோதியை, சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கி வைத்தார். 21 கிலோ மீட்டர் வரை ஜோதியை பள்ளி மாணவர்கள் கொண்டு வந்து பாரதியார் படித்த வகுப்பறையில் கொண்டுவந்து வைத்தனர்.
இதில் பள்ளி செயலாளர் செல்லையா, தலைவர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் சிதம்பரம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் சண்முகம், சுரேஷ் தளவாய் திருமலையப்பன், ம.தி.தா. இந்து கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், துணை முதல்வர் சேகர், பள்ளி தலைமை ஆசிரியர் உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மகாதேவன் பாரதியின் இந்து கலாச்சாலை என்ற தலைப்பில் பேசினார்.

Next Story