பட்டதாரி வாலிபர் கொலை; 3 பேர் சிக்கினர்


பட்டதாரி வாலிபர் கொலை; 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 29 Aug 2021 7:39 PM GMT (Updated: 2021-08-30T01:09:28+05:30)

கூடங்குளம் அருகே பட்டதாரி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் சி்க்கினர்.

கூடங்குளம்:
கூடங்குளம் அருகே பட்டதாரி வாலிபர் கொலையில் 3 பேர் சிக்கினர்.

பட்டதாரி வாலிபர்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கூத்தங்குளி சுனாமி காலனியைச் சேர்ந்தவர் கித்தேரியான். இவருடைய மகன் அபினேஷ் (வயது 20). இவர் பி.எஸ்சி. நர்சிங் படித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவில் கூத்தங்குளியில் இருந்து சுனாமி காலனிக்கு நடந்து சென்று ெகாண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென்று அபினேஷை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக ெவட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அபினேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றது.

போலீசார் விசாரணை

இதனைப் பார்த்த அப்பகுதியினர் கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா, கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அபினேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதன் விவரம் வருமாறு:-

முன்விரோதம்

கொலை செய்யப்பட்ட அபினேஷின் குடும்பத்தினர் முன்பு கூத்தங்குளி கீழூரில் வசித்து வந்தனர். 
அப்போது அங்கு கீழூர், மேலூரில் வசிப்பவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இதனால் அபினேஷின் குடும்பத்தினர் வீட்டை காலி செய்து விட்டு, கடந்த 4 ஆண்டுகளாக சுனாமி காலனியில் வசித்து வந்தனர். 
எனவே பழைய முன்விரோதம் காரணமாக அபினேஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 பேர் சிக்கினர்

இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கூத்தங்குளி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story