விவசாயி மர்ம சாவு


விவசாயி மர்ம சாவு
x
தினத்தந்தி 29 Aug 2021 7:43 PM GMT (Updated: 2021-08-30T01:13:40+05:30)

விவசாயி மர்மமான முறையில் இறந்தார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள நடுத்தெருவை சேர்ந்தவர் வாசுதேவன்(வயது 43). விவசாயியான இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாசுதேவனின் மனைவி ராமேஸ்வரி வயலுக்கு சென்று விட்டு, பின்னர் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வாசுதேவன் வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக வாசுதேவனின் தந்தை கலியமூர்த்தி, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாசுதேவன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story