2 வீடுகளில் நகை-பணம் திருடிய வாலிபர் கைது
2 வீடுகளில் நகை-பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்:
திருட்டு
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 11-வது வார்டுக்கு உட்பட்ட அபிராமபுரம் 3-வது தெருவில் கடந்த 7-ந்தேதி ஆசிரியர் வீடு உள்பட 2 வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 13 பவுன் நகை, ரூ.3 லட்சத்து 6 ஆயிரம் மற்றும் மடிக்கணினி ஒன்று, ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவற்றையும், மேலும் ஒரு வீட்டில் 2 செல்போன்களும் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகசேன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார், திருட்டு சம்பவம் நடந்த வீடுகளின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில், மர்ம நபர் ஒருவர் அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்ததும், அவர் வீட்டின் பூட்டை உடைத்ததும் பதிவாகி இருந்தது.
வாலிபர் கைது
இதையடுத்து அந்த மர்ம நபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து ேபாலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் திருச்சி மாவட்டம், வடக்கு காட்டூர், வி.எஸ்.காலனியை சேர்ந்த அமரேசன் மகன் நிர்மல்ராஜ் (வயது 29) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த நிர்மல்ராஜை தனிப்படை போலீசார் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 7½ பவுன் நகை மற்றும் செல்போன் ஒன்றும் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story