மாவட்டத்தில் இதுவரை 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


மாவட்டத்தில் இதுவரை 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 29 Aug 2021 7:50 PM GMT (Updated: 2021-08-30T01:20:44+05:30)

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் என பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் மையம் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் மும்முரமாக போடப்பட்டு வருகிறது.
நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தடுப்பூசி மையம் செயல்படுகிறது. இங்கு இரவில் வந்து மக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
தற்போது இதுவரை நெல்லை மாவட்டத்தில் 5 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் இதுவரை 65 ஆயிரத்து 600 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 962 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

Next Story