லாரி- ஆட்டோ மோதல்; 3 பேர் படுகாயம்


லாரி- ஆட்டோ மோதல்; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 30 Aug 2021 1:34 AM IST (Updated: 30 Aug 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி அருகே லாரியும், ஆட்டோவும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

புளியங்குடி:
சிவகாசியில் இருந்து பேப்பர் பண்டல் ஏற்றிக் கொண்டு கேரளாவிற்கு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை திருத்தங்கலைச் சேர்ந்த சுரேஷ் (வயது 24) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று காலை புளியங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது புளியங்குடியில் இருந்து அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு கூலி ஆட்களை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று அவர்களை இறக்கிவிட்டு விட்டு ரோட்டோரம் நின்று கொண்டிருந்தது. ஆட்டோவின் அருகே அதன் டிரைவர் புளியங்குடியைச் சேர்ந்த கண்ணன் (21) என்பவர் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது லாரி மோதியது. இதில் ஆட்டோ நொறுங்கியதுடன் லாரி, ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் சுரேஷ், கிளீனர் கருப்பசாமி மற்றும் ஆட்டோ டிரைவர் கண்ணன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்ததும் புளியங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களை மீட்டு புளியங்குடி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story