வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சோமரசம்பேட்டை
திருச்சி இனாம்குளத்தூர் அருகே உள்ள சின்னாளப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 23). இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். உறவினரின் வீட்டிற்கு செல்வதற்காக கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு ஐஸ்வர்யா சென்றார்.பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 13 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து இனாம்குளத்தூர் போலீசில் ஐஸ்வர்யா புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யதேவி வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story