சரக்கு லாரியில் கடத்திய ரூ.21 கோடி கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது


சரக்கு லாரியில் கடத்திய ரூ.21 கோடி கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2021 1:55 AM IST (Updated: 30 Aug 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் இருந்து ஐதராபாத்திற்கு சரக்கு லாரியில் கடத்திய ரூ.21 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை

  மராட்டிய மாநிலத்தில் இருந்து ஐதராபாத்திற்கு கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக பெங்களூரு மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஐதராபாத்தில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது ஐதராபாத் ரிங் ரோடு அருகே உள்ள சுங்கச்சாவடிக்கு வந்த மராட்டிய மாநில பதிவு எண்ணை கொண்ட ஒரு சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி பெங்களூரு மற்றும் ஐதராபாத் மண்டலங்களை சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

ரூ.21 கோடி மதிப்பு

  அந்த லாரியில் ஏராளமான மூட்டைகள் இருந்தது. அவற்றை திறந்து பார்த்த போது கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக 141 மூட்டைகள் இருந்தது. அவற்றில் 3,400 கிலோ கஞ்சா இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த லாரியையும், 3,400 கிலோ கஞ்சாவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். அந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.21 கோடிக்கு மேல்இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, கஞ்சா கடத்தியதாக லாரி டிரைவர் உள்பட 3 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்காக, அவை கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Next Story