மாவட்ட செய்திகள்

விபத்தில் காயம் அடைந்த முதியவர் சாவு + "||" + Elderly man injured in accident dies

விபத்தில் காயம் அடைந்த முதியவர் சாவு

விபத்தில் காயம் அடைந்த முதியவர் சாவு
விபத்தில் காயம் அடைந்த முதியவர் இறந்தார்.
அச்சன்புதூர்:
கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி கர்ணம் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி பாண்டியன் (வயது 73). தி.மு.க. பிரமுகர். இவர் கடந்த 24-ந்் தேதி தென்காசியில் இருந்து சொக்கம்பட்டிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் சென்றபோது பின்னால் வந்த லாரி கிருஷ்ணசாமி பாண்டியன் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த கிருஷ்ணசாமி பாண்டியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த கிருஷ்ணசாமி பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணசாமி பாண்டியன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விபத்தில் காயமடைந்த மூதாட்டி சாவு
நெல்லையில் விபத்தில் காயமடைந்த மூதாட்டி இறந்தார்.
2. விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3. கோபி அருகே வேன்-ஆட்டோ மோதல்; சிறுமி பலி
கோபி அருகே வேனும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி பலியானார்.
4. லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்; புது மாப்பிள்ளை பலி
ஓட்டப்பிடாரம் அருகே லாரி மீது மோட்டார்சை்ககிள் மோதியதில் புது மாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
5. விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு
விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.