வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கைது


வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 8:27 PM GMT (Updated: 2021-08-30T01:57:01+05:30)

வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்

கே.கே.நகர்
 திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூர், காவல்காரன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவகுமார் (வயது 30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாலகுமார் (29), கார்த்திக் (23), சதீஷ்குமார் (20) மற்றொரு சதீஷ்குமார் ஆகிய 4 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சிவகுமார் வீட்டுக்கு சென்ற 4 பேரும், அவரை தகாத வார்த்தையால் திட்டி கையில் வைத்திருந்த கத்தியால் கை மற்றும் முகத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து சிவகுமார் அளித்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுமார் உள்பட 3 பேரை கைது செய்தனர். சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.


Next Story