சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 96 ஆயிரத்தை தாண்டியது-புதிதாக 56 பேருக்கு நோய் தொற்று


சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 96 ஆயிரத்தை தாண்டியது-புதிதாக 56 பேருக்கு நோய் தொற்று
x
தினத்தந்தி 30 Aug 2021 2:57 AM IST (Updated: 30 Aug 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 56 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 96 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 56 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 96 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
56 பேருக்கு நோய் தொற்று
சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதாவது 100-க்கு கீழ் பாதிப்பு எண்ணிக்கை நீடிக்கிறது. நேற்று முன்தினம் 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று மேலும் குறைந்து 56 பேருக்கு மட்டுமே நோய் தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதியில் 15 பேர், எடப்பாடியில் 6 பேர், சங்ககிரியில் 5 பேர், ஓமலூரில் 4 பேர், தலைவாசல், வீரபாண்டி, காடையாம்பட்டியில் தலா 3 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 2 பேர், கொளத்தூர், மகுடஞ்சாவடி, தாரமங்கலம், கெங்கவல்லி, நங்கவள்ளி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 
இதேபோல், சேலத்திற்கு சென்னையில் இருந்து வந்த 3 பேர், நாமக்கல்லில் இருந்து வந்த 4 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 3 பேருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
96 ஆயிரத்தை தாண்டியது
இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 96 ஆயிரத்தை கடந்துள்ளது. அதாவது, நேற்று முன்தினம் 95 ஆயிரத்து 967 ஆக இருந்தது. நேற்று மேலும் 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 96 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 113 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதனால் 891 பேர் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 1,630 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story