நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று வியாபாரிகள் மார்க்கெட் நுழைவுவாயில் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் சீலை அகற்றி கடைகளை திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கடைகள் சீல் வைக்கப்பட்டதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கடைகளை திறக்க வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக வியாபாரிகள் அறிவித்து நோட்டீஸ்களை வினியோகித்தனர். பின்னர் அந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story