புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2021 4:38 PM IST (Updated: 30 Aug 2021 4:38 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் திருவள்ளூர் வண்டிக்காரத்தெருவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த திருவள்ளூர் வீரராகவரன் தெருவை சேர்ந்த அஸ்லாம் (31) என்பவர் போலீசாரை கண்டதும் தான் வைத்திருந்த பெரிய சாக்குப்பையுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது அவர் வைத்திருந்த சாக்குப்பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 14 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அஸ்லாமை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story