ரூ.5½ கோடி செலவில் கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்பு திறப்பு


ரூ.5½ கோடி செலவில் கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்பு திறப்பு
x
தினத்தந்தி 30 Aug 2021 12:51 PM GMT (Updated: 30 Aug 2021 12:51 PM GMT)

தூத்துக்குடியில் ரூ.5½ கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்பு திறக்கப்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ரூ.5½ கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்பு திறக்கப்பட்டது.

போலீஸ் குடியிருப்பு

தமிழக அரசு உத்தரவின்பேரில் நெல்லை கோட்ட தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூ.5 கோடியே 64 லட்சம் செலவில் தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் புதிதாக போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர்களுக்கான குடியிருப்புகள் 3, சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான குடியிருப்புகள் 9, காவலர்களுக்கான குடியிருப்புகள் 23 ஆக மொத்தம் 35 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.

இந்த குடியிருப்புகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார். 
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று குடியிருப்பில் குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் குமரேசன், இளநிலை உதவி பொறியாளர் சுசித்ரா, தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், உதயலட்சுமி, ஞானராஜ், நம்பிராஜன், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story