குழாய் உடைந்ததால் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம்
லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம்
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் புற்று கோவில் பகுதியிலும் கடந்த சில மாதங்களாக பாதாளசாக்கடை திட்டப் பணிகள் நடக்கிறது. இந்த பணியின் போது அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் புற்று கோவில் பகுதியில் உள்ள 4 தெருக்களுக்கு கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அவதி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின் பேரில் நேற்று காலை புற்று கோவில் பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உடைக்கப்பட்ட குழாய்களை சீரமைக்கும் பணியும் நடந்தது. பணிகள் முடிக்கப்பட்டு தொடர்ந்து குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story