வேடசந்தூர் அருகே மனைவி இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


வேடசந்தூர் அருகே மனைவி இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 30 Aug 2021 7:35 PM IST (Updated: 30 Aug 2021 7:35 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேடசந்தூர்:
சேலம் மாவட்டம் வீடுகாத்தாம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 38). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் அவருக்கு ஒரு மகன் உள்ளார். விஜயகுமார் கடந்த சில மாதங்களாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அம்மாபட்டியில் தங்கி, அங்குள்ள தனியாருக்கு சொந்தமான கல் குவாரியில் வேலை செய்து வந்தார். 
இந்தநிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மனஉளைச்சலில் இருந்து வந்த விஜயகுமார் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் கல்குவாரி அருகில் உள்ள ஒரு மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 
இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story