வேடசந்தூரில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


வேடசந்தூரில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2021 7:45 PM IST (Updated: 30 Aug 2021 7:45 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் கொள்முதல் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேடசந்தூர்:
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வேடசந்தூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வேடசந்தூர் ஒன்றிய அமைப்பாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். 
இதில் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொருளாளர் சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் முனியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். அதாவது எருமைபால் லிட்டர் ரூ.51-க்கும், பசும்பால் லிட்டர் ரூ.42-க்கும் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு உடனுக்குடன் பணத்தை பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 50 சதவீத மானியத்தில் மாட்டு தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கோஷமிட்டனர்.

Next Story