ரூ.2¼ கோடியில் தார்சாலை அமைக்கும் பணி தீவிரம்


ரூ.2¼ கோடியில் தார்சாலை அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 30 Aug 2021 2:24 PM GMT (Updated: 2021-08-30T19:54:29+05:30)

தேனி மாவட்டம் வருசநாடு அருகே ரூ.2¼ கோடியில் தார்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தேனி : 


தேனி மாவட்டம் வருசநாடு அருகே முருக்கோடை முதல் காமராஜபுரம் வரை பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 19 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெரும்பாலான பணிகள் முடிவடைந்திருந்த நிலையில் வருசநாடு வனத்துறையினர் சாலை அமைக்கும் பணிக்கு தடை விதித்தனர்.

 இதனால் கடந்த 2  தார்சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. மேலும் காமராஜபுரம் வரையிலான அரசு பஸ் சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் காமராஜபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சென்று வந்தனர். 

இந்த நிலையில் மாவட்ட அதிகாரிகள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு கடந்த மாதம் வருசநாடு முதல் காமராஜபுரம் இடையே தார்சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். தற்போது தார்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை துரிதப்படுத்தி காமராஜபுரம் வரை மீண்டும் பஸ் சேவையை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story