லாரி டிரைவர் வீட்டில் 3 பவுன் நகை திருட்டு
சாத்தான்குளத்தில் லாரி டிரைவர் வீட்டில் 3 பவுன் நகை திருட்டு போனது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி மல்லிகா நெல்லை மாவட்டம் களக்காட்டில் நடந்த திருமண விழாவுக்கு சென்றார். மகள் பரமேஸ்வரி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவர் வீட்டின் வெளியே பாத்திரம் கழுவி விட்டு வந்தபோது வீட்டு பீரோவில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் தங்க மோதிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
இதையடுத்து அவர் தந்தைக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து முருகன் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story