கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர் மற்றும் பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர் மற்றும் பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை
திருப்பூர், ஆக.31-
திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர் மற்றும் பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூரப்பன் கோவிலில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலித்தார். பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர். கோவிலின் உள்பகுதியில் கிருஷ்ணர் மற்றும் வெண்ணெய் பானைகள் போன்று அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதுபோல் ராயபுரத்தில் உள்ள பூமிநீளா சமேத வேணுகோபால கிருஷ்ணசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் வேணுகோபாலசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் திருப்பூர் பெருமாள் கோவில்களிலும் நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வீடுகளிலும் கிருஷ்ணரை வரவேற்று வண்ண கோலமிட்டு வெண்ணை மற்றும் பலகாரங்கள் படைத்து வழிபாடு செய்தனர்.
Related Tags :
Next Story