குடிபோதையில் தாயை துன்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்து தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற 10ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் தாயை துன்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்து தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற 10ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூரில் குடிபோதையில் தாயை துன்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்து தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற 10-ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தந்தை குத்திக்கொலை
திருப்பூரை சேர்ந்த 49 வயது தொழிலாளி பனியன் நிறுவனம் ஒன்றில் உணவகம் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவியும் அங்கு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 15 வயதில் மகன் உள்ளான். இவன் திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். தொழிலாளியின் மனைவிக்கு இருதயநோய் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தொழிலாளி தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
அதுபோல் நேற்று முன்தினம் இரவும் குடிபோதையில் வந்த தொழிலாளி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் இருந்த அவருடைய மகன் ஆத்திரம் அடைந்து தந்தையை தட்டிக்கேட்டுள்ளான். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர், வீட்டில் இருந்த கத்தியால் மாணவன் தனது தந்தையின் நெஞ்சு பகுதியில் குத்தியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் தொழிலாளி இறந்தார்.
மாணவன் கைது
இது குறித்து தகவல் அறிந்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்து பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
Related Tags :
Next Story