உடுமலை பெரியகடைவீதியில் உள்ள நவநீதகிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தி
உடுமலை பெரியகடைவீதியில் உள்ள நவநீதகிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தி
உடுமலை,
உடுமலை பெரியகடைவீதியில் உள்ள நவநீதகிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ண ஜெயந்தியை வீடுகளில் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். வீடுகளில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு கண்ணன் வேடமணிந்தும், பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமணிந்தும் மாலை நேரங்களில்கிருஷ்ணருக்கு வழிபாடு நடத்தப்படும். அதன்படி நேற்றுஉடுமலையில் சில வீடுகளில் ஆண்குழந்தைகளுக்கு கண்ணன் வேடமும், பெண் குழந்தைகளுக்கு ராதைவேடமும் அணிவித்திருந்தனர். கண்ணன் சிறுபிள்ளையாக வீட்டுக்குள் வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலில் இருந்து பூஜை அறைவரை, வரையப்பட்டு, குழந்தை பருவத்தில் உள்ள கண்ணன் விரும்பும் வெண்ணெய், சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்களை வீடுகளில் கிருஷ்ணருக்கு படைத்து வழிபட்டனர்.
Related Tags :
Next Story