திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தொழிலாளர்களுக்கு கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்


திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தொழிலாளர்களுக்கு கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 30 Aug 2021 4:15 PM GMT (Updated: 30 Aug 2021 4:15 PM GMT)

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தொழிலாளர்களுக்கு கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தொழிலாளர்களுக்கு கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம்
திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நேற்று மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் சுகாதாரம், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த ஆலோசனை நடந்தது. இதில் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாள்தோறும் 34 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு பிரத்யேகமாக தடுப்பூசி முகாம் ஏற்படுத்தி அதில் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள ஆலோசனை நடத்தப்பட்டது. தொழிலாளர்களின் விவரங்கள் மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து பின்னர் மண்டலத்துக்கு ஒரு மையத்தை தொழிலாளர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
முழு ஒத்துழைப்பு
ஓரிரு நாட்களில் தொழிலாளர்களுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அனைவரும் மாநகராட்சியின் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளை முறையாக பயன்படுத்தி பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். வெளியே சென்றாலும் சமூக இடைவெளியை கடைபிடித்து அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று ஆணையாளர் அறிவுறுத்தினார்.   

Next Story