மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் சாவு
மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்துள்ள மேல்புழுதியூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கங்கைஅமரன் (வயது 37), தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் விவசாய நிலத்தில் மின்மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கங்கைஅமரன் இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story