சாராயம், மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது


சாராயம், மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2021 5:30 PM GMT (Updated: 2021-08-30T23:00:01+05:30)

சாராயம், மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

வளவனூர், 

வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில்  சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, வளவனூர் குடுமியாகுப்பம் அருகே புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்த பாண்டியன் மகன் பிரகாஷ் (வயது 30) என்பவர் மோட்டார் சைக்கிளில் சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

 இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மோட்டார் சைக்கிளில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த கோலியனூர் கூட்டு ரோடு அருகே திருபுவனம் தெற்கு கருங்குளத்தை சேர்ந்த குப்புசாமியின் மனைவி சீதா (32) என்பவரை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Next Story