விபத்தில் ஓட்டல் பணியாளர் பலி


விபத்தில் ஓட்டல் பணியாளர் பலி
x
தினத்தந்தி 30 Aug 2021 11:19 PM IST (Updated: 30 Aug 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் ஓட்டல் பணியாளர் பலியானார்.

திருப்புவனம், 
திருப்புவனம் புதூரை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது30). மதுரையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றபோது சம்பராயனேந்தல் கிராமத்தை சேர்ந்த லெட்சுமணன் தனது சகோதரர் கண்ணனுடன் வந்த  மொபட் மீது சதாம் உசேன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சதாம் உசேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை பிரேதத்தை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் விசாரணை செய்து வருகிறார்.

Next Story