மாவட்ட செய்திகள்

கடலூர் கடல் பகுதியில் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் + "||" + Officers on patrol at Vidya Vidya in Cuddalore sea area

கடலூர் கடல் பகுதியில் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்

கடலூர் கடல் பகுதியில் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்
புதுச்சேரி மீனவா்கள் சுருக்குமடி வலையுடன் கடலூருக்குள் நுழைவதை தடுக்க, கடலூர் கடல் பகுதியில் அதிகாாிகள் விடிய விடிய ரோந்து பணி மேற்கொண்டனா்.
கடலூர் முதுநகர், 

புதுச்சேரி மாநிலம் நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் கிராம மீனவர்களுக்கிடையே சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரியை சோ்ந்த சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் கடலூர் மாவட்ட கடல் பகுதிக்குள் படகுகளுடன் நுழைய முயன்றனா். இதுபற்றி அறிந்த கடலோரக் காவல் குழுமம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், புதுச்சோி மாநில மீனவா்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர்.

ரோந்து பணி

இந்த சம்பவத்தால், கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் கடற்கரையோர கிராமங்களில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் புதுச்சேரி மாநில மீனவா்கள் படகுகளுடன் கடலூர் துறைமுகத்திற்குள் நுழையாதவாறு தடுக்க மீன்வளத்துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன் தலைமையில் ஆய்வாளர் மணிகண்டன், உதவி ஆய்வாளர் பிரபாகரன், மேற்பார்வையாளர் அறிவேந்தன், கடல் சட்ட அமலாக்க பிரிவு சாம்பசிவம் மற்றும் போலீசார் இணைந்து கடலூர் துறைமுகம் அருகே உள்ள கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை விடிய விடிய விசைப்படகுகளில் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பூட்டை உடைத்து பாதாள அறைைய திறந்து சிலைகளை வெளியே எடுத்த அதிகாரிகள்
பழமையான அகத்தீசுவரர் கோவிலின் பாதாள ரகசிய அறையை பூட்டை உடைத்து திறந்து, அதன் உள்ளே இருந்த சிலைகளை அதிகாரிகள் வெளியே எடுத்தனர். அந்த நேரத்தில் கோவிலின் வெளியே பக்தர்கள் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது.
2. மராட்டியத்தில் 1,500 கிலோ போதை பொருள் பறிமுதல்
ஆந்திராவில் இருந்து மராட்டியத்திற்கு கடத்திய 1,500 கிலோ போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
3. சென்னையில் மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
சென்னையில், வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
4. குழந்தைகள் காப்பகத்திற்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள் அரசு பள்ளி ஆசிரியை-கணவர் மீது வழக்கு
காப்பக குழந்தைகளை வீட்டுவேலைகளுக்கு பயன்படுத்தி வந்ததாக புகார் வந்ததன் அடிப்படையில் காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியை-கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5. ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
புஞ்சைபுளியம்பட்டி காய்கறி சந்தையில் ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர்.