தீக்குளித்த பெண் சாவு
விக்கிரமசிங்கபுரம் அருகே தீக்குளித்த பெண் இறந்தார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே ஆறுமுகம்பட்டி அருந்ததி தெருவை சேர்ந்தவர் பேபி (வயது 50). இவர் சிவந்திபுரம் ஊராட்சியில் தூய்மை காவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 27-ந்தேதி மதியம் வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற அவர், மாலையில் தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் தீக்காயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பேபி இறந்தார். இதுபற்றி விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story