பெயிண்டர் வெட்டிக்கொலை
அதிராம்பட்டினத்தில், பெயிண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினத்தில், பெயிண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
பெயிண்டர்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள செட்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 40). பெயிண்டர். வாழைக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராஜு மகன் சுரேஷ்(37). இவர் தேங்காய் உரிக்கும் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு பெயிண்டர் சுரேசுக்கும், வாைழக்கொல்லை சுரேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வெட்டிக்கொலை
நேற்று இரவு 7.30 மணி அளவில் பெயிண்டர் சுரேஷ் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சென்றார். அப்போது அங்கு சாக்குப்பையில் ஆடு வெட்டும் அரிவாளை மறைத்து எடுத்து வந்த வாழைக்கொல்லை சுரேஷ், திடீரென பெயிண்டர் சுரேசின் கழுத்தில் வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த பெயிண்டர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். உடனே சம்பவ இடத்தில் இருந்து வாழக்கொல்லை சுரேஷ் தப்பி ஓடி விட்டார்.
வலைவீச்சு
இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலகண்ணன், அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெயிண்டர் சுரேசின் உடலை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாைழக்கொல்லை சுரேசை தேடி வருகிறார்கள்.
பரபரப்பு
கொலை செய்யப்பட்ட பெயிண்டர் சுரேசுக்கு சித்ரா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிராம்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story