கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2021 8:44 PM GMT (Updated: 2021-08-31T02:14:43+05:30)

விருத்தாசலத்தில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருத்தாசலம், 

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் விருத்தாசலம் ஸ்டேட் வங்கி பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் மணியரசன், மக்கள் விடுதலை ராமர், கம்மாபுரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் கியாஸ் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், பட்டை நாமம்போட்டும், விறகு அடுப்பில் சமையல் செய்துவபோல் காட்டி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story