மீன்பிடிக்க சென்று பாதியில் கரை திரும்பிய குளச்சல் மீனவர்கள்


மீன்பிடிக்க சென்று பாதியில் கரை திரும்பிய குளச்சல் மீனவர்கள்
x
தினத்தந்தி 31 Aug 2021 2:52 AM IST (Updated: 31 Aug 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

கடலில் சூறைக்காற்று வீசியதால் மீன்பிடிக்க சென்ற குளச்சல் கட்டுமர மீனவர்கள் பாதியில் கரை திரும்பினர்.

குளச்சல்:
கடலில் சூறைக்காற்று வீசியதால், மீன்பிடிக்க சென்ற குளச்சல் கட்டுமர மீனவர்கள், பாதியில் கரை திரும்பினர்.
குளச்சல் மீனவர்கள்
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட சிறிய படகுகளும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் வள்ளம், கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆனால் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியது. இதனால் அந்த மீனவர்கள் கட்டுமரங்களை தொடர்ந்து கடலுக்குள் செலுத்த முடியவில்லை.
இதனால் அவர்கள் மீன்பிடிக்கும் முயற்சியை கைவிட்டு பாதியிலேயே கரை திரும்பினர். கரை திரும்பிய படகுகள் மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
வியாபாரிகள் ஏமாற்றம்
சூறைக்காற்றையும் மீறி சில மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். ஆனால் மீன்கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் நேற்று குளச்சலில் மீன் வரத்து பாதிக்கப்பட்டது. எனவே மீன் வாங்க வந்த வியாபாரிகள், பொதுமக்கள் மீன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதையும் காண முடிந்தது.

Next Story