வேலூரில் வீட்டுமனைபட்டா கேட்டு திருநங்கைகள் மனு


வேலூரில் வீட்டுமனைபட்டா கேட்டு திருநங்கைகள் மனு
x
தினத்தந்தி 31 Aug 2021 4:37 PM IST (Updated: 31 Aug 2021 4:37 PM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனைபட்டா கேட்டு திருநங்கைகள் மனு

வேலூர்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாநகர் பகுதியில் 30 திருநங்கைகள் கடந்த 20 ஆண்டுகளாக வீடுகள் இன்றி வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வேலைவாய்ப்புகள் இல்லாததால் வாடகை செலுத்துவதில் சிரமமாக உள்ளது. எனவே வீடு கட்டிக்கொள்ள இலவச வீட்டுமனை கேட்டு கடந்த 2019-ம் ஆண்டு மனு கொடுத்தோம். ஆனால் வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story