சமய விழாக்களுக்கு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வேண்டுகோள்


சமய விழாக்களுக்கு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 31 Aug 2021 8:23 PM IST (Updated: 31 Aug 2021 8:23 PM IST)
t-max-icont-min-icon

சமய விழாக்களுக்கு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் வருகிற 15-ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடித்து தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் அனைத்து சமய தலைவர்கள் செயல்பட வேண்டும். விழாக் கொண்டாட்டங்களின் போது பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து, கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story