திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.45½ லட்சம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.45½ லட்சம்
x
தினத்தந்தி 31 Aug 2021 8:55 PM IST (Updated: 31 Aug 2021 8:55 PM IST)
t-max-icont-min-icon

அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.45½ லட்சம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இருப்பினும் மற்ற நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். 
மேலும் கடந்த மாதத்தில் இருந்து வாரத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த பணியை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
 
இதில் உண்டியல் காணிக்கையாக 263 கிராம் தங்கம், 728 கிராம் வெள்ளி, ரூ.45 லட்சத்து 46 ஆயிரத்து 436 பெறப்பட்டது.

Next Story