உடுமலை அரசுகலைக்கல்லூரி இன்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது.
உடுமலை அரசுகலைக்கல்லூரி இன்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது.
உடுமலை,
உடுமலை அரசுகலைக்கல்லூரி இன்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது.
அரசுகலைக்கல்லூரி
உடுமலை எலையமுத்தூர் சாலையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுவரும் நிலையில் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் அதிகமாக வந்துவிட்டால், இடம்பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இந்த அரசு கலைக்கல்லூரியில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டது.
இதற்காக, கடந்த சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கல்லூரியின் பிரதான கட்டிடத்தில் ஒருபகுதி ஆகிய 2 இடங்களில் நோயாளிகள் தங்கும் வகையில் 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு, கொரோனா வார்டு அமைக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அதன்பின்னர் தனிமைபடுத்தப்படவேண்டிய கொரோனா நோயாளிகள் அரசுகலைக்கல்லூரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
கிருமி நாசினி
தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவ மனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உடுமலை அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா வார்டில், கடந்த 1½ மாதங்களுக்கு மேலாக கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை.
அனைவரும் வீடு திரும்பியதைத்தொடர்ந்து உடனடியாக அந்த கொரோனா வார்டு பகுதிகள் முழுவதும் நகராட்சி துப்புரவு பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா வார்டு அகற்றப்படாமல், தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்ளும் வகையிலேயே தயார் நிலையில் வைக்கப்பட்டு வந்தது.
கல்லூரி திறப்பு
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி உடுமலை அரசு கலைக்கல்லூரியும் இன்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து உடுமலை அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா வார்டு அகற்றப்பட்டது.
கொரோனா வார்டில் நோயாளிகள் தங்குவதற்காக தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த அறைகள் பிரிக்கப்பட்டு, அவற்றை அகற்றும் பணிகள்கடந்த 2 நாட்களாக நடந்தன. இந்த வார்டில் போடப்பட்டிருந்த கட்டில்கள் மற்றும் மெத்தைகள் ஆகியவை லாரிகள் மூலம் அரசு மாணவர் விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.
சுத்தம் செய்யும் பணிகள்
இதைத்தொடர்ந்து இந்த கொரோனா வார்டு அறைகள் கழுவி சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணிகளை நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் க.கவுரிசரவணன் அறிவுரைப்படிநேற்று நகராட்சி சுகாதாரப்பணியாளர்கள் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story