குன்னத்தூர் அருகே குளியலறையில் செல்போனை மறைத்து வைத்து இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
குன்னத்தூர் அருகே குளியலறையில் செல்போனை மறைத்து வைத்து இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
குன்னத்தூர்,
குன்னத்தூர் அருகே குளியலறையில் செல்போனை மறைத்து வைத்து இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கட்டிட தொழிலாளி
குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 10 வயது மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால் கணேசனின் மகன்களை கணேசனின் தாயார் வளர்த்து வருகிறார். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கணேசன் அங்கு வந்து தனது மகன்களை பார்த்து செல்வது வழக்கம்.
குளியல் அறையில் செல்போன்
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து மகன்களை பார்க்க கணேசன் வந்துள்ளார். கணேசனின் செல்போன் அந்த பகுதியில் உள்ள ஒரு குளியலறையில் இருந்துள்ளது.
அந்த குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்த 18 வயது இளம் பெண் ஒருவர் அங்கு செல்போன் இருப்பதை பார்த்து அதிர்சியடைந்தார். இதனால் அந்த இளம் பெண் கூச்சல் போட்டார். இது குறித்து குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக குன்னத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கைது
மேலும் கணேசனிடம் இருந்த செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த செல்போனில் இளம் குளிக்கும் வீடியோ பதிவாகி இருந்தது.
இதையடுத்து கணேசனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story