கல்லூரி மாணவர் தற்கொலை


கல்லூரி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 31 Aug 2021 3:53 PM GMT (Updated: 2021-08-31T21:23:35+05:30)

கல்லூரி மாணவர் தற்கொலை

அவினாசி, 
அவினாசி கை காட்டிப்புதூர் இந்திரா காலனியை சேர்ந்த ரவி மகன் குமரேசன் (வயது 24) இவர் திருப்பூர் சிக்கன்னா கல்லூரியில் பிகாம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா காலம் என்பதால் தற்போது பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுவந்தார். இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வயிற்றுவலி அதிகமானதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த குமரேசன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story