குலசேகரன்பட்டினம் கோவிலில் திருட்டு


குலசேகரன்பட்டினம் கோவிலில் திருட்டு
x
தினத்தந்தி 31 Aug 2021 3:53 PM GMT (Updated: 2021-08-31T21:23:48+05:30)

கோவிலில் திருட்டு

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் குண்டாங்கரை சுடலை கோவிலில் நம்பி என்பவர் பூஜை செய்து வருகிறார். கடந்த 29-ம்தேதி மதியம் பூஜையை முடித்து விட்டு வீட்டுக்கு ெசன்று விட்டார். நேற்று காலையில் பூஜைக்காக கோவிலை திறந்து பார்த்தபோது கோவிலின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. அந்த வழியாக கோவிலுக்குள்  இறங்கிய மர்ம நபர் அங்கிருந்த சிடி பிளேயர், ஆம்ப்ளிபயர் ஆகிவற்றை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகி கண்ணன் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story