தூத்துக்குடி: தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி: தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2021 4:00 PM GMT (Updated: 2021-08-31T21:30:42+05:30)

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழகம் டெப்போ முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு.வினர் நேற்று காலையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு சொந்தமான ரெயில்வே, துறைமுகம், விமான நிலையம், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக நேற்று அதிகாலையில் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

Next Story