நாகையில், வெளுத்து வாங்கிய மழை
நாகையில், மழை வெளுத்து வாங்கியது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நாகப்பட்டினம்:
நாகையில், மழை வெளுத்து வாங்கியது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெளுத்து வாங்கிய மழை
நாகையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பெரும்பாலான நாட்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் சட்டெரித்தது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் தென்பட்டது. அவ்வப்போது மழை பெய்து வந்தது.இந்த நிலையில் வழக்கம்போல நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்தது. மதியத்துக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மாலை 4 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழை 1½ மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
குறிப்பாக நாகை புதிய பஸ் நிலையம் வெள்ளக்காடாக காட்சியளித்தது. வ.உ.சி. தெரு குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. ஒரு சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வாளி மூலம் வெளியே ஊற்றினர். கல்லு கார தெரு, வண்டிக்கார தெரு, நேதாஜி ரோடு, நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட சாலைகளில் தேங்கிய மழைநீரில் வாகனகள் நீந்தியபடி சென்றன.
அதேபோல திருமருகல், திட்டச்சேரி, திருக்கண்ணபுரம், போலகம், அம்பல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் குறுவை நெல் பயிருக்கு போதுமான அளவு நீர் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
கீழ்வேளூர், சிக்கல், ஆழியூர், அகரகடம்பனூர், தேவூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை. குருக்கத்தி, கூத்தூர், நீலப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடியுடன் மழை பெய்தது.மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி நேரம் நீடித்தது. இதனால் தாழ்வாக பகதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
பரவை, வேளாங்கண்ணி, சிக்கல், நாகூர், உள்ளிட்ட பகுதிகளிலுமழை பெய்தது. இந்த மழை காரணமாக நாகையில் குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story