கோவில்பட்டியில் பள்ளிக்கூட பஸ்கள் ஆய்வு
கோவில்பட்டியில் 45 பள்ளிக்கூட பஸ்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 4 பஸ்களில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் 45 பள்ளிக்கூட பஸ்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 4 பஸ்களில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது,
பள்ளிக்கூட பஸ்களில் ஆய்வு
தமிழக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்று (புதன்கிழமை) முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவின் பேரில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம் தாலுகாவில் இயங்கும் பள்ளிகளின் பஸ்களை ஆய்வு செய்யும் பணி நடந்தது.
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர் பத்மபிரியா, நேர்முக உதவியாளர் உமா மகேஸ்வரி, சூப்பிரண்டு இன்ப குமார் ஆகியோர் ஆய்வு நடத்தினா்.
ஆய்வுக்கு பின்பு வட்டார போக்குவரத்து அதிகாரி கூறியதாவது:-
குறைபாடுகள் கண்டுபிடிப்பு
பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு, கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு, விளாத்திகுளம் தாலுகாவில் உள்ள பள்ளிக்கூடங்களின் மாணவர்களை ஏற்றி வர பயன்படுத்தும் 45 பஸ்களை ஆய்வு செய்தோம். ஓட்டுனர்களுக்கு முறையான லைசென்ஸ் உள்ளதா, பஸ்கள் தகுதிச் சான்றிதழ் பெற்றுள்ளதா, பஸ்களில் தீயணைக்கும் கருவிகள், அவசர வழிகள் உள்ளதா என்பதை சோதனை நடத்தினோம்.
இதில் 4 பஸ்களில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவர்கள் அலுவலக நாட்களில் குறைகளை நிவர்த்தி செய்து எங்களிடம் அனுமதி பெற்று பஸ்களை இயக்கலாம். சோதனை செய்யப்பட்ட 41 பஸ்களுக்கும் முன்பக்கம் எங்கள் அலுவலகம் சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.
இந்த பஸ்கள் மட்டும் இயக்கப்படும், பஸ்களில் மாணவர்கள் அரசு அனுமதிக் கப்பட்ட அளவில் ஏற்றிச் செல்ல வேண்டும். இதை நாங்கள் கண்காணிப் போம். அதிக அளவில் மாணவர்கள் ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story