கடலூர் மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 62 ஆயிரத்து 251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 39 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் சென்னையில் இருந்து கம்மாபுரம் வந்த ஒருவர், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 9 பேர், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 29 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 60 ஆயிரத்து 901 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 40 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் இது வரை 835 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை. கொரோனா பாதித்த 451 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 63 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாவட்டத்தில் கட்டுப்பாட்டு 4 ஆக இருந்தது.
Related Tags :
Next Story