கார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு


கார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
x
தினத்தந்தி 31 Aug 2021 11:27 PM IST (Updated: 31 Aug 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

வீட்டு முன்பு நிறுத்திய கார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவகோட்டை, 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பாரதி நகரை சேர்ந்தவர், கோட்டைச்சாமி (வயது 42). இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு பஞ்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கொரோனா பரவலை தொடர்ந்து தற்போது குடும்பத்துடன் தேவகோட்டையில் வசித்து வருகிறார். 
இந்தநிலையில் கோட்டைச்சாமிக்கும் அவருடைய உறவினர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோட்டைச்சாமி தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் வெளியே பயங்கர சத்தம் கேட்டது. உடனே அவர் பதறியபடி வெளியே வந்து பார்த்தபோது போர்டிகோவில் நிறுத்தப்பட்டு இருந்த கார், பெட்ரோல் குண்டு வீச்சில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. 
உடனடியாக சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரின் உதவியைக்கொண்டு தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.  துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். 
கோட்டைச்சாமியை கடந்த மாதம், 5 ேபர் முகக்கவசம் அணிந்து வழிமறித்து தாக்கியுள்ளனர். அப்போது பொதுமக்கள் கூடவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது. இதன் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது. 
எனவே இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story