விடுதி அறையில் நர்சிங் மாணவி தற்கொலை


விடுதி அறையில் நர்சிங் மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 1 Sept 2021 12:01 AM IST (Updated: 1 Sept 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி இன்று திறக்கப்படும் நிலையில் நர்சிங் மாணவி, விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி கொரோனா 2-வது அலை காரணமாக மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் இன்று (புதன்கிழமை) முதல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.  சிவகாசி நாரணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகள் கவுசல்யா(வயது 18). இவர் அந்த நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படிக்க சேர்ந்து இருந்தார்.

தற்கொலை

 நேற்று முன்தினமே கவுசல்யா தனது உடைமைகளுடன் கல்லூரி விடுதிக்கு வந்து தங்கினார். இந்த நிலையில் நேற்று காலை கவுசல்யா ேவறு சில மாணவிகளுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டார். அதன்பிறகு தனது அறைக்கு சென்றார். அங்கு யாரும் இல்லாத போது மாணவி கவுசல்யா மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி அறிந்த கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கும், ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story