இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 1.5 டன் திமிங்கலம்
பழையாறு கடற்பகுதியில் இறந்த நிலையில் 1.5 டன் எடை கொண்ட திமிங்கலம் கரை ஒதுங்கியது.
கொள்ளிடம், செப்.1-
பழையாறு கடற்பகுதியில் இறந்த நிலையில் 1½ டன் எடை கொண்ட திமிங்கலம் கரை ஒதுங்கியது.
கரை ஒதுங்கிய திமிங்கலம்
கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது துறைமுக பகுதியில் 5.5 மீட்டர் நீளமும், 2.40 மீட்டர் அகலமும், 1½ டன் எடையுடன் திமிங்கலம் ஒன்று இறந்து காரையோரத்தில் கிடந்தது. அதனை மீனவர்கள் மீட்டு கடலோர காவல் துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள், கடலோர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இது கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் மிகவும் அரிய வகை திமிங்கலம். இது சுறா வகையை சார்ந்தது என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அரசு கால்நடை டாக்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் புதைக்கப்பட்டது.
Related Tags :
Next Story