மேலும் 57 பேருக்கு கொரோனா-பாதிப்பு எண்ணிக்கை 48,840 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48,840 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல்:
57 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 48 ஆயிரத்து 780 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48 ஆயிரத்து 783 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று புதிதாக மேலும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 840 ஆக அதிகரித்து உள்ளது.
அதிகரிப்பு
இந்தநிலையில் நேற்று 55 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 47 ஆயிரத்து 832 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 538 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று 57 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து இருப்பதால், பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story