மணல் கடத்திய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்திய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Sept 2021 2:14 AM IST (Updated: 1 Sept 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன

அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே நாயக்கர்பட்டி வெள்ளாற்று பகுதியில் நேற்று அறந்தாங்கி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வெள்ளாற்றில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்த 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சிலட்டூரை சேர்ந்த முருகன், மூக்குடி பகுதியை சேர்ந்த இளையராஜா, கருப்பையன், ரமேஷ், விஸ்வநாதன், அழியாநிலையை சேர்ந்த குமரேசன், கருப்பையா, சிங்காரவேலு ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story