அரசு மருத்துவமனையில் பெண் பிணம்


அரசு மருத்துவமனையில் பெண் பிணம்
x
தினத்தந்தி 31 Aug 2021 8:54 PM GMT (Updated: 2021-09-01T02:24:38+05:30)

அரசு மருத்துவமனையில் பெண் பிணமாக கிடந்தார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது அவர் இறந்தாரா? என்பதும் தெரியவில்லை.
இது குறித்து பெரம்பலூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத கிடங்கிற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story